காயச்சாறு

புழுங்கலரிசியை பொரியும்படி வறுத்துக் கொள்ளவும். ரவை மாதிரி மிக்ஸியில் உடைக்கலாம். இல்லை ஊற வைத்து அரைக்கலாம்.
எண்ணெய் ஊற்றி வடகத்தை வறுத்து எடுக்கவும். பின் பூண்டை வதக்கி எடுக்கவும். மிளகாயை கருகாமல் வறுத்துக் கொள்ளவும். கிரைண்டரிலோ, மிக்ஸியிலோ அரைக்கவும். எல்லாவற்றையும் தனித்தனியாக அரைக்கவும். பித்தளை போனிலோ, அலுமினிய வட்டவோ வைத்து, மிளகாய், மஞ்சள், கடுகு, மிளகு அரைத்ததை உப்பு கலக்கி, தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் வாழை, முருங்கை போட்டு 2 கொதித்தவுடன் கத்தரியைப் போடு, சுண்ட கடலை வெந்ததைப் போட்டு காய் முக்கால் வேக்காடு வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள அரிசியுடன், பூண்டு, சீரகம், கறிவேப்பிலை, புளி கரைசலையும் கலந்து ஊற்றி கொதிக்க விடவும். சுக்கு பொடித்தாலும், இல்லை அரைத்து விழுதாக இருந்தாலும் அரிசியுடன் கலந்து ஊற்றவும். நன்கு கொதித்தவுடன் எண்ணெய், நெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து ஊற்றவும். வடகம் பொறு பொறு என்று இருந்தால் கடைசியில் போட்டு இறக்கவும். பூண்டு நோக வதக்கி இருந்தால் மேலாக போட்டு மூடி வைக்கவும். சூட்டுக்கு நன்கு வெந்து குழையாமல் இருக்கும் சிவப்பு ஆடை வரும் வரை கொதிக்க விடவும்.
