top of page
Tropical Leaves
AVKC-welfare.png

AVKCWelfare.Org

இணைய தளத்தின் நோக்கம் 

சமூக ஒற்றுமை

காசுக்கார செட்டியார் சமூகத்தை சேர்ந்த நாம் அனைவரும் நம்  பழம்பெருமை, மரபு , பண்பு   ஆகியவற்றை  பேணிக்காப்பது அவசியம்.       

நமது சமூக மக்களின் நல்வாழ்விற்கு, வளர்ச்சிக்கு, மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து அனைவரும் ஒன்றுசேர்ந்து பாடுபடவேண்டும்.

நம் சமூக வல்லுனர்கள்

நமது சமூகத்தில் அறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், அறிவாற்றல் மற்றும் திறன்வாய்ந்த அனுபவசாலிகள் பலர் உள்ளனர். அவர்களின் ஆலோசனை, சேவைகள் நமது சமூகத்திற்கு மிகவும் அவசியம். வல்லுனர்களையும், நமது சமூக மக்களையும்  இணைக்கும் பாலமாக இந்த கேள்வி-பதில் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் சாராது நமது சமூக பிரச்சினைகளுக்கு வல்லுநர்கள் மூலமாக நம்மக்கள் தீர்வு காண வேண்டும் என்பதே இந்த இணைய தளத்தின் நோக்கம் .

சமூக தகவல்கள் மட்டுமே

காசுக்கார செட்டியார் சமூகத்தை சார்ந்த தகவல்கள்  மட்டுமே பதிவேற்றம் செய்ய  பிரேத்யேகமாக இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. வேறு எந்த பொது தகவல்களையும் ( Whatsapp Forward, Good Morning Message )  கண்டிப்பாக தவிர்க்க வேண்டுகிறோம். மீறி பதிவு செய்தால் அவை அகற்றப்படும்.

சமூக மக்கள் உறுப்பினர் சேர்க்கை

இந்தியா முழுவதும் உள்ள நமது காசுக்கார செட்டியார் சமூக மக்களை AVKC Welfare இணைய தள உறுப்பினர் சேர்க்கை மூலம் ஒன்றிணைப்பது சமூக மேம்பாட்டிற்கு மிகவும் அவசியமானது. இதில் உள்ள தகவல்கள் வேறு எதற்கும் பயன்படுத்தப்பட மாட்டாது. தகவல்களை யாரும் பார்க்கவோ பிரதி எடுக்கவோ இயலாது. இந்த கணக்கெடுப்பிற்கு சேகரிக்கப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். இந்த உறுப்பினர் சேர்க்கை மூலம் தகவல் பெறுவதற்கு  வேறு நோக்கமும் கிடையாது.

பொறுப்பு வரம்பு

இந்த avkcwelfare.org இணைய தளத்திற்கும் AVKC  டிரஸ்ட்டிற்கும் சம்பந்தம் இல்லை. இணையதளம் நமது சமூக மக்களின் நல்வாழ்விற்கு நலக் கூட்டமைப்பு உறுப்பினர்களால் நடத்தப்படுகிறது . 

இந்த இணைய தளத்தில் எந்த விதமான பண பரிமாற்றங்களும் இல்லை. உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட எந்த ஆதாயமும் கிடையாது.

இந்த இணையதளத்தில் உள்ள பகுதிகளில் இடம்பெறும் தகவல்கள் பதிவிடும் நபரே பொறுப்பு. இணையதள நிர்வாகிகளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

இந்த இணையதளத்தில் உள்ள தகவல் பகுதிகளில் இந்த வெப்சைட் பற்றிய குறைகள் நிறைகளை தெரிவிக்கலாம்.  இணையதள மேம்பாட்டிற்கு ஆலோசனை வழங்கலாம்.  

bottom of page