ஆயிரவைசியர் சங்கம் மற்றும் வாசக சாலை மற்றும் நூல் நிலையம், விருதுநகர் )
( தகவல் - திரு. சந்தநாதன், விருதுநகர் )
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாசக சாலை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் நம் முன்னோர்களுக்கு ஏன் வந்திருக்க வேண்டும்.
நமது சமூக முன்னேற்றம் சமூக மக்களின் கல்வி அறிவில் தான் இருக்கிறது. அதை ஊக்கப்படுத்தினால் தானாக சமூகம் முன்னேறும் என்கிற தீர்க்க தரிசனம் தான்.
1920 ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நூல் நிலையம் இந்த 2020 ஆண்டுடன் நூற்றாண்டை கடந்து நிலைத்து நிற்கிறது
இந்த நூலகத்தில் ஆயிரக்கணக்கில் வரலாற்று சிறப்பு வாய்ந்த தமிழ் புத்தங்கங்கள் முன்னோர்களால் வாங்கி வைக்கப்பட்டுள்ளது.
பல வருடங்களுக்கு முன்னர் நம் சமூகத்தில் பலர் இங்கு வந்து பத்திரிகைகளையும் நூல்களையும் படிப்பது வழக்கம்.
ஸ்ரீமாரியம்மன் கோவில் இடது புறத்தில் அமைந்துள்ளது
பல ஆண்டுகளுக்கு முன்னால் நம் சமூக மக்கள் இந்த கட்டிடத்தின் மாடிப் பகுதியில் இருந்து ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனி ப் பொங்கல் திருவிழா நிகழ்ச்சிகளையும் தேரோட்டம் வரும் போது வசதியாக நின்று கண்டு களித்து வந்தனர் என்று சமூக பெரியவர்கள் நினைவு கூர்கின்றனர்.
தற்போது கடந்த இருபது வருஷமாக பராமரிக்க ப் படாமல் கம்பீரத்தை இழந்து களை இல்லாமல் இருந்து வருகிறது.
நூலகம் மீண்டும் புதுப்பிக்கப்படுமா?