ஆயிர வைசிய காசுக்கார செட்டியார்கள் சமூகத்தினரின் மகமை உறவின்முறை மற்றும் காரியாபட்டி மண்ணின் பெருமை
பெரிய பிள்ளையார் கோவில் தெரு ( செட்டியார் தெரு )
காரியாபட்டி தாலுகா
விருதுநகர் மாவட்டம் – 626001
ஆயிர வைசிய காசுக்கார செட்டியார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பழமையான முருகன் கோவில்


ஆயிர வைசிய காசுக்கார செட்டியார்களுக்கு பாத்தியப்பட்ட நந்தவனம், சொக்கர் மீனாட்சி ஆலயம்




ஆயிர வைசிய காசுக்கார செட்டியார்களுக்கு பாத்தியப்பட்ட மண்டபம்

AVKC காரியாபட்டி வணிக வளாகம்

காசுக்கார செட்டியார் ரைஸ் மில்

AVKC மகமை வீடு

மதுரை- அருப்புக்கோட்டை சாலையில் மதுரைக்கு தெற்கே 30 கிமீ தொலைவில் உள்ளது. தற்போது இது பேரூராட்சியாக உள்ளது.
தற்சமயம், காரியாபட்டி தாலுகா தகுதி பெற்றுள்ளதால் தாலுகாவிற்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை , தாலுகா அலுவலகம், காவல் நிலையம், பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்கள் உள்ளது.
பாரத் ஆரம்ப பள்ளி தற்சமயம் அரசு பள்ளியாக மாறி உள்ளது. பாரத் ஆரம்பப்பள்ளி முன்னாள் தாளாளர் தெய்வத்திரு எஸ். என் . பொன்னுசாமி செட்டியார் அவர்கள் ஆவார்.
இவ்வூர் பெயர்காரணம்
ஆதியில் காதியா மூப்பர் என்பவர் இப்பகுதியில் குடியேறி வழிப்போக்கர்களுக்கு தொண்டு செய்தும், விவசாயம் செய்தும் வாழ்ந்து வந்தார் என்றும் அவரது இருப்பிடத்தை பகுதியில் குடியேறி வழிப்போக்கர்களுக்கு தொண்டு செய்தும் விவசாயம் செய்தும் வாழ்ந்து வந்தார் என்றும் அவரது இருப்பிடத்தை குறிப்பிடும் வகையில் காதியாபட்டி என்றழைக்கப்பட்டு பின் காரியாபட்டி என்று வந்திருப்பதாக ஒரு செவி வழி செய்தி உள்ளது.
வள்ளல்கள்
அரசு பெண்கள் பள்ளிக்கு இரண்டு ஏக்கர் 30 சென்ட் தானமாக அளித்தவர் தெய்வத்திரு எஸ் என் பொன்னுச்சாமி அவர்கள்.
1958ஆம் ஆண்டு மதிக்கத்தக்க தெய்வத்திரு பரிட்சித்து செட்டியார் அவர்கள் மும்முறை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். பஸ் நிலையம், மின்சார வசதி, தொலைபேசி வசதி கொண்டு வந்ததுடன் பெண்கள் முன்னேற்றத்திற்காக குழு அமைத்தவர்கள் தெய்வத்திரு நாகலிங்கம் செட்டியார் மற்றும் தெய்வத்திரு பரீட்சித்து செட்டியார் ஆவார்கள்.
அழிந்துவிட்ட தொழில்கள்
காரியாபட்டியில் கைமுறுக்கு ( விரலில் மாட்டிக் கொள்ள தக்கதாக தனிச் சுவையுடன் இருக்கும்) தயாரிக்கும் தொழில் பெயர்பெற்ற குடிசைத் தொழிலாக இருந்து மறைந்து விட்டது.
இத்தொழிலை நம் சமூகத்தை சேர்ந்த தெய்வத்திரு காமாட்சி செட்டியார் அவர்கள் மகள் சீதை அம்மாள், அவருடைய தங்கை குஞ்சம்மாள் அந்தக் காலத்தில் தினமும் கை முறுக்கு சுட்டு வாழை மட்டையில் கோர்த்து அன்றாடம் வியாபாரம் செய்தார்கள். அதை வாங்கிக் கொண்டு தினமும் ராமசாமி செட்டியார், ராசு செட்டியார் காரியாபட்டி பஸ்நிலையத்தில் விற்று வருவார்களாம். அந்த நாளில் இந்த கைமுறுக்கிற்கு அமோக வரவேற்பு இருந்ததாம்.
இவ்வூரில் உள்ள தெய்வங்கள்
முருகன் கோவில் முன் மண்டபம் 1934 ஆம் வருடம் தெய்வத்திரு சோ. நாகலிங்கம் செட்டியார் அவர்களால் கட்டிக்கொடுக்கப்பட்டது.
கந்தசாமி் கவிராயர் அவர்களின் கவிதை
சரவணபவகுக என
மனதில் நினைப்பவர்களுக்கு
குயில் கூவி பொழில் தாவும்
உயர் காரி நகர் மேவும்
குமரகுருபரா
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் முன்னுரையுடன் வெளியிடப்பட்டது.
முருகன் கோவில் மிகவும் பழமையானது. செட்டியார்களுக்கு சொந்தமானது. கேசவன் செட்டியார் முன்னின்று 2003ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தினார்கள். ஆயிர வைசிய காசுக்கார செட்டியார்களுக்கு பாத்தியப்பட்ட நந்தவனம் உள்ளது. அதன் உள்ளே, பழமை வாய்ந்த முனீஸ்வரன் கோவில், சொக்கர் மீனாட்சி ஆலயம் கோவில்கள் உள்ளன. முத்தாளம்மன் கோவில் பொது கோயில். வைகாசி மாதம் திருவிழாவிற்கு கொடி கட்டும் வைபவம் நம் சமூகத்தினரின் தலைமையில் நடைபெறும். மற்ற சமூகத்தினரும் கலந்து கொள்வார்கள். ஒற்றுமையாக அம்மன் திருவிழா நடைபெறும்
ஆயிர வைசிய செட்டியார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கல்யாண விநாயகர் , அருள்மிகு காளியம்மன் குடமுழுக்கு விழா 20- 1- 2008 ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. அந்த நாளில் புரட்டாசி மாதம் முதல் செவ்வாய் அன்று காளியம்மனுக்கு தெய்வத்திரு வெங்கலவன் செட்டியார் என்பவர் கரகம் எடுத்து வருவார். நம் சமூகத்தினர் அனைவரும் பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு திருவிழா கொண்டாடுவார். காலப்போக்கில் அழிந்து விட்டது.
முன்னாள் டிரஸ்டிகள்
· ஸ்ரீ மு சோ அடைக்கலம் செட்டியார் 1910 முதல் 1920 வரை
· ஸ்ரீ சோ நாகலிங்கம் செட்டியார் 1920 முதல் 1940 வரை
· ஸ்ரீ அ ராமசாமி செட்டியார் 1940 முதல் 1963 வரை
· ஸ்ரீ எஸ் என் பொன்னுச்சாமி செட்டியார் 1963 முதல் 1979 வரை
· ஸ்ரீ அ. மாரியப்பன் செட்டியார் 1979 முதல் 1990 வரை
உறவின்முறை தலைவர் - திரு சு தங்கராசு செட்டியார்
டிரஸ்டி - எஸ் பி ஜெயராமன் செட்டியார் 2000 - 2015 வரை
தற்போதைய அரங்காவலர் திரு ஆர் பாலாஜி செட்டியார் அவர்கள் தற்போதைய உறவின்முறை தலைவர் திரு என் பாஸ்கரன் செட்டியார் அவர்கள் திரு பாஸ்கரன் அவர்கள் உறவின்முறை தலைவராக பொறுப்பேற்ற பின் முருகன் கோவில் கும்பாபிஷேகம், கல்யாண விநாயகர், காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் உறவின்முறை சொந்தமான பழைய கட்டிடங்களை இடித்து நவீன முறையில் கடைகள் கட்டி வாடகைகளை அதிகரித்து வைத்து நம் மகமைக்கும் உறவின் முறைக்கும் வருமானத்தைப் பெருக்கி நம் சமூகத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவருடைய அளப்பரிய சேவை பாராட்டுக்குரியது.
முன்னாளில் தெய்வத்திரு எம் ரத்தினம் செட்டியார் முப்பத்தாறு வருடங்கள் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்து வந்தார். நம் சமூகத்திற்கு பெருமை சேர்த்தவர்.
காரியாபட்டி ஆயிரவைசிய காசுக்கார செட்டியார்களின்
மொத்த தலை கட்டு விபரம்
பெரிய பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர்கள்
1. திரு எஸ். தங்கராசு செட்டியார் - திருமதி மாரியம்மாள்
2. திரு எஸ் நாகராஜன் செட்டியார் - திருமதி செண்பகவல்லி
3. திரு எம் வாசுதேவன் செட்டியார் - தெய்வத்திரு நளாயினி அம்மாள்
4. திரு எஸ்.என்.பி சந்திரமோகன் செட்டியா யார் - திருமதி C மகாலட்சுமி
5. திரு எஸ்.என்.பி ஜெயராமன் செட்டியார் - திருமதி ஜெ பாக்கியலட்சுமி
6. தெய்வத்திரு எம் பாலசுப்பிரமணியன் செட்டியார் - திருமதி விஜயலட்சுமி திரு வி ராதாகிருஷ்ணன் செட்டியார் - திருமதி ஆர் மீனாட்சி
7. திரு எஸ்.என்.பி மணி - திருமதி எம் உமாதேவி
8. திரு என். ராஜகோபால் - திருமதி தனம்
9. தெய்வத்திரு சி நாராயணன் செட்டியார் - திருமதி புஷ்பா
10. திரு என் ஸ்ரீதர் - திருமதி நாகேஸ்வரி
11. தெய்வத்திரு எம் ரத்தினம் செட்டியார் - திருமதி வசந்தா
12. திரு ராஜ்மோகன் செட்டியார் - திருமதி ராமலட்சுமி
13. திரு சிங்கார வடிவேலு - திருமதி லதா
14. திருமதி மீனாட்சி அம்மாள்
15. தெய்வத்திரு என் மூர்த்தி - திருமதி பானுமதி
16. திரு T சங்கரநாராயணன் - திருமதி S மீனா
17. திரு T சேகர் - திருமதி முத்து
18. திரு என் பாஸ்கரன் செட்டியார் - திருமதி பீமா கலைச்செல்வி
காரியாபட்டி பாண்டியன் நகரில் வசிப்பவர்கள்
1. தெய்வத்திரு எஸ் பாலசுப்பிரமணியன் செட்டியார் ( RETD டீச்சர் - பாரத் பள்ளி ) - திருமதி விஜயலட்சுமி
2. திரு S செந்தில் - எஸ் வசந்தா
3. திரு எம் சீனிவாசன் - திருமதி கவிதா
4. திருமதி பாக்கியலட்சுமி அவர்கள் மகன் திரு சரவணன் அவர்கள்
5. திரு T கண்ணன் - திருமதி கே லட்சுமி
6. தெய்வத் திரு சுப்பிரமணியன் செட்டியார் - திருமதி பேபி
7. திரு பாலகிருஷ்ணன் - திருமதி அபிநயா
8. தெய்வத்திரு எஸ் கேசவன் செட்டியார் - திருமதி கே பருவதம்மாள் மகன் கே தேவசேனன்
நிறைவுற்றது
மற்ற பதிவுகள் பார்க்க கீழே சொடுக்கவும்
AVKC விருதுநகர் தோல்சாப்பு விநாயகர் வளாகம்
அருள்மிகு ஸ்ரீ செட்டி நீராவி கோவில், AVKC விருதுநகர்
விருதுநகர் AVKC ஆற்று நந்தவன விநாயகர் வளாகம்
பாலையம்பட்டி செட்டி நீராவி-அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவில்
பேரையூர் AVKC உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ தெப்பத்து முக்தி விநாயகர் திருக்கோயில்
பேரையூர் AVKC ஆதி மகாலிங்கம் செட்டியார் வகையறாவிற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பிழைபொறுத்த விநாயகர் கோவில்
ஆயிர வைசிய காசுக்கார செட்டியார்கள் சமூகத்தினரின் மகமை உறவின்முறை மற்றும் காரியாபட்டி மண்ணின் பெருமை