தாய் மாமா பட்டம் கட்டுதல்
முதலில் பெண்ணின் தாய்மாமா முக்காலியில் அமர்ந்து பெண்ணுக்கு பட்டம்கட்ட வேண்டும் தாய்மாமா அனைவரும் கட்டிவிட்டு, மாமாமுறை உள்ளவர்கள் கட்ட வேண்டும். கடைசியாக , மாப்பிள்ளையின் அப்பா அரசிலை பட்டம் கட்ட வேண்டும். பட்டம் கட்டியவர்களுக்கு வடகம், பருப்பு, முறுக்கு கொடுக்கவும்.
தாரை வார்த்தல்
இரண்டு சம்பந்திகளும்ஒருவருக்கொருவர் சந்தனம் பூசி, மாலை போட்டு மரியாதை செய்வார்கள். பெண்ணின் பெற்றோர் மாப்பிள்ளையின் பெற்றோரிடம் தங்கள் மகளை தாரை வார்க்கும் சடங்கு நடை பெறும். அதற்கு பிறகு மாப்பிள்ளை எழுந்து, முக்காலியில் அமர்ந்து பெண்ணுக்குத் தாலி கட்டவும்.