தேங்காய் பூரணம்
தேங்காய் துருவல் 1 கப்
வெல்லம் 3/4 கப்
ஏலம் 2
தேங்காயை துருவி முக்கால் பாகம் வெல்லம் சேர்த்து ஏலம் போட்டு வதக்கி இறக்கவும்.
எள்ளு பூரணம்
எள் 100gm
கருப்பு (அல்லது) வெள்ளை
வெல்லம் 2 பங்கு
எள்ளை (கழுவி வைத்து) வறுக்கவும். தொட்டு நசுக்கினால் மாவாகும். கருகக் கூடாது. பின் மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் வெல்லத்தையும் போட்டு அரைத்து எடுக்கவும்.
கடலைப்பருப்பு, 1 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து எடுக்கவும். வாணெலியில் எண்ணெய் விட்டு கடுகு, மிளகாய், பெருங்காயம் தாளித்து அரைத்த கடலைபருப்பில் சேர்த்து பிசைந்து, இட்லி தட்டில் வேகவைத்து எடுத்து, பின் உதிர்த்து வைக்கவும். இதே மாதிரி உளுந்தையும் ஊறவைத்து, வேகவைத்து செய்யலாம்.
கொலுக்கட்டை மாவு
பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, அரிசி கூடையில் தண்ணீரை வடிகட்டி, ரைஸ் மில்லில் நைசாக அரைக்கவும். அரைத்த மாவை வாணெலியில் போட்டு வறுக்க வேண்டும். மாவை எடுத்து கோலம் போட்டால் நன்றாக வரும். இது தான் பதம். மாவை இரு தினங்களுக்கு முன் செய்து தட்டில் உலர வைக்கவும். ஒரு பேஷனில் மாவை அளந்து எடுத்து கொள்ளவும். தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்ததும் மாவில் ஊற்றி நன்றாக பிசைந்து, சிறிது எண்ணெய் விட்டு பிசைந்து, மூடி வைக்கவும். கையில் செய்யும் பழக்கமிருந்தால் கிண்ணம் செய்து பூரணத்தை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
மோதகம்
வறுத்த மாவு 1/4 படி
வெல்லம் 1/4 படிக்கு கொஞ்சம் கூட (1 1/4 பங்கு)
நல்ல அரிசியாக இருந்தால் ½ படி தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு கொதிக்க வைக்கவும். பின் சல்லடையில் ஊற்றி மண்ணை வடிகட்டி எடுத்து திரும்ப கொதிக்க விடவும். சிறிது தண்ணீரை எடுத்து வைத்து கொள்ளவும். தேங்காயை பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி ஏலக்காய் பொடி போட்டு சிறிது பாசிப்பருப்பு வறுத்து போட்டு கொதிக்கும் தண்ணீரில் மாவை கொட்டி கிளறவும். தேவையானால் எடுத்து வைத்த தண்ணீர் சேர்த்து பிசைந்து மாவு உருட்டு பதத்தில் வந்தவுடன் ஆறவைத்து எண்ணெய் தொட்டு உருண்டையாக உருட்டி ஆவியில் இட்லிதட்டில் வேக வைத்து எடுக்கவும்.
ஆவணி மாதம், ஆவணித்திருவிழா நடக்கும் இரண்டு நேரமும் சாமி வீதி உலா வரும், ஒவ்வொரு நாளும் திருவிளையாடல் புராணத்தில் நிகழ்ச்சியாக ஸ்வாமி வருவார். அதில் மாணிக்கம் விற்ற லீலையை நமது சமூகத்திற்கு உப்பட்ட கோவிலில் வந்து இறங்கி நடத்துவார்கள். மேலத் தெருவில் மாணிக்கத்தை பல்லாக்கில் வைத்து சுற்றி வருவார்கள்.
பாயசம்பாசிப்பருப்பு 200gm
தேங்காய் துருவல் 1 கப்
வெல்லம் 400
ஏலப்பொடி,முந்திரி, கிஸ்மிஸ்
பால் 1டம்ளர்
பாசிப்பருப்பை லேசாக வறுத்து வேக வைக்கவும். தேங்காயை மிக்ஸியில் அரைத்து பருப்புடன் சேர்த்து கொதிக்க விட்டு, வெல்லம் போட்டு, பால் 1 டம்ளர் ஊற்றி, ஏலக்காய் பொடி போட்டு அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் போடவும். (தேங்காயை துருவியும் அல்லது தேங்காய் பால் ஊற்றியும் செய்யலாம்.)