சுக்கு உருண்டை
சுக்கு 100 gm
கருப்பட்டி 500 gm
நல்லெண்ணெய் 100 gm
சுக்கை நன்றாக வறுக்கவும். உள்ளே ரோஸ் கலராக இருக்க வேண்டும். பின் மிக்ஸியில் போட்டு மாவாக திரித்து, சலித்து எடுக்கவும். பின் அந்த மாவில் கருப்பட்டியைக் கலந்து திரும்ப மிக்ஸியில் போட்டு அடித்து கொள்ளவும். பாத்திரத்தில் போட்டு எண்ணெண்யை நன்குகாய வைத்து, ஊற்றி, பிசைந்து உருட்டவும். பிசைந்த சுக்கு மெழுகாக இருக்க வேண்டும். எண்ணெண்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி உருட்டவும்.