வெற்றிலை பாக்கு பரிமாறும் வைபவம்
பெண் வீட்டார் கொண்டு செல்ல வேண்டிய சாமான்கள் :
1) மஞ்சள் 11
2) சந்தனவில்லை 11
3) வெற்றிலை, பாக்கு 7
4) சீருக்கு 11 ரூ.
5) தேங்காய் 11 – மஞ்சள் தடவியது
6) வாழைப்பழம் 101
7) பால் சட்டி
8) ஆரஞ்சு
9) ஆப்பிள்
10) சப்போட்டா
11) செவ்வாழை
12) கொடை ஆரஞ்சு
13) திராட்சை பச்சை, திராட்சை பன்னீர்
14) மாம்பழம்
15) மிட்டாய் வகைகள்
16) சின்ன கல்கண்டு (அ) பெரிய கல்கண்டு
17) சீனி 1/2 கிலோ
18) பேரீச்சம்பழம், கிஸ்மிஸ், செர்ரி
19) மாலை, கைக்கேடயம்
20) தட்டுக்கு பூ, மகளிர்க்கு பூ
நல்ல நாள் பார்த்து, நிச்சயத்துக்கு முகூர்த்தப்பாய் வாங்கவும். தாலி வைக்க மரக்கூடு, திருநீற்றுப்பை வாங்கவும்.
பேசி முடித்தவுடன் நல்ல நாள் பார்த்து கோலத்துக்கு அரைத்து ஊற்றவும்.
மாப்பிள்ளைக்கு குடை, செருப்பு வாங்கவும்.
மாப்பிள்ளை வீட்டில், பெண்ணுக்கு பால் ஊற்ற ஒரு நல்ல நாளில் தேங்காய், பழம், ஸ்வீட், வெற்றிலை, பாக்கு, சோப், சீப்பு, கண்ணாடி, பவுடர், நகப் பாலிஷ், டவல், சாந்து, ஹேர் கிளிப், ஹாண்ட்பேக், கிரீம், பேன்ஸி சாமான்கள் வாங்கவும்.
பொரி அள்ளியிட மச்சினனுக்கு, டிரஸ், மோதிரம் வாங்கவும்.
தாலி முடிச்சு போட நாத்தனாருக்கு புடவை, சட்டை நாத்தனார் மாப்பிள்ளைக்கு டிரஸ் வாங்கவும். குழந்தைகளுக்கும் முடிந்தால் கொடுக்கவும்.