பூப்பறித்து போடுதல் – ஊஞ்சல் வைபவம்
பெண்ணை தாய்மாமாவின்மனைவி அழைத்துக்கொண்டு வாசலுக்கு வரவேண்டும். வரும்பொழுது உருளியில் உதிரிபுஷ்பங்கள் போட்டு எடுத்துவரவும். முதலில் பெண் மாப்பிள்ளையை வணங்கி, இருகைகளிலும் உதிரிப்பூ வைஎடுத்து, மாப்பிள்ளை மார்பில் போடவும் (3 முறை) பின் மாலையை கழற்றி மாப்பிள்ளை கழுத்தில் போடவும். பின் மாப்பிள்ளை தன்மாலையை கழற்றி பெண்ணுக்கு போடவும். பெண் மூக்கில் கை வைத்துவாங்கிக் கொள்ளவும். இப்படி 3 முறை இருவரும் மாற்றிக் கொள்ளவும். பின் பெண்ணும், மாப்பிள்ளையும் கைகோர்த்து மண்டபத்திற்குள் சென்று ஊஞ்சலில் அமரவும். பின் மணமேடைக்குச் சென்று அமரவும்.