பெண் பார்க்கும் வைபவம்
பெண்பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு கொண்டு செல்ல வேண்டியது.
காலையில் மஞ்சப் பிள்ளையார் பிடித்து விளக்கேற்றி மஞ்சள் துணியில் காசு முடிந்து சூடன், பத்தி காண்பிக்கவும்.
மஞ்சள் கிழங்கு
குங்கும கூடு
வெற்றிலை, பாக்கு
பூ, ஸ்வீட்.
கோவில் என்றால் அர்ச்சனைக்கு தேங்காய், பழம், பூ, வெற்றிலை, பாக்கு, சூடம், பத்தி வாங்கவும்.
வெளியூரிலிருந்து பெண், மாப்பிள்ளை வந்தால் கோவிலில் மாவுக்கோலம் போடவும்.
கொண்டு போக வேண்டிய பொருட்கள்.
1. விளக்கு திரியுடன்
2. மஞ்ச பிள்ளையார்
3. நிறைகுடம் தண்ணீர்
4. சந்தனம்
5. குங்குமம்
6. பெட்ஷீட்
7. தட்டுகள்
8. பூ
9. கத்தரிகோல்
10. பாலிதீன் பைகள்
11. பேப்பர் டம்ளர்.
12. பெண்ணுக்கு சேலையும் பரிசு தரலாம்.
முதலில் பெண்ணையும், மாப்பிள்ளையும் எதிராக உட்கார வைத்து, நாத்தனார் (அ) மாமியார் யாராவது பெண்ணுக்கு சந்தனம், குங்குமம், பூ வைத்து ஸ்வீட் கொடுத்து பெண்ணிடம் பால் டம்ளரை கொடுத்து மாப்பிள்ளைக்கு கொடுக்கவும். பின் எல்லாருக்கும் பால் (அ) கிரஸ் கொடுக்கவும். பின் மாப்பிள்ளை அர்ச்சனை செய்து அர்ச்சனை தேங்காய், பழத் தட்டை இருவீட்டாரும் மாற்றிக் கொள்ளவும். ஐயர் தரும் மாலையைப் போட்டு கோலத்தில் அமர்த்தி ஆரத்தி எடுத்து பால், பழம் கொடுக்கவும்.
வீட்டில் பெண் பார்த்தால் இதே மாதிரி செய்யவும்.