முகூர்த்தத்தன்று
முகூர்த்த நாள் காலை பொங்கல் வைத்தல்
பெண்ணும், பெண்ணைச் சேர்ந்த 5 பெண்களும் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு, புதுப்புடவை கட்டிக் கொண்டு, கையில் சந்தனம் பூசி, நெற்றியில் சந்தனம் வைத்து, குங்குமம் வைத்து, பெண்களும் சந்தனம் பூசி பொட்டு வைக்கவும். முடிந்தால் பொங்கல் வைக்கலாம். 3 பானையிலும் மஞ்சள் விரலியும், வெற்றிலையும் கட்டி, மாவு பூசி குங்குமம் வைக்கவும்.
பொங்கல் வைக்க முடியவில்லைஎன்றால் 3 பானையிலும் சாதம் நிரப்பி வெல்லம் வைக்கவும்.
கல்யாணத்தன்று காலையில் பெண் வீட்டாருக்கு வேட்டி, புடவை, மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கவும். அதே மாதிரி மாப்பிள்ளையும் செய்யவும்.
சரடு பெருக்கும் முறை :
1) விளக்கு, திரி, மஞ்சள் பிள்ளையார்
2) பத்தி, சூடம்
3) நூல்கண்டு
4) மஞ்சள்பொடி
5) சூட தட்டு
6) மணி
7) பூ
8) வாழை இலை
9) நாட்டு பழம்
10) வெற்றிலை, பாக்கு
11) கருப்பட்டி சீவியது
12) தேங்காய்
13) பழம்
14) வேக வைத்த பாசிபருப்பு (பாதி வெந்தது)
15) அரிவாள்
16) சந்தனக் கும்பா
17) குங்குமக் கூடு
18) விபூதி
19) தட்டு, சுண்ணாம்பு
ஆண்கள் டிபன் சாப்பிட்டு, வெற்றிலை போட்டு, சந்தனம் பூசி, பொட்டு வைத்து, விளக்கு வைத்து இலையில் அரைவேக்காடு வெந்த பாசிப்பருப்புடன் கருப்பட்டி, நாட்டு பழம் போட்டு பிசைந்து, வாழை இலையில் வைத்து நீர் விளாவி, சூடம் ஏற்றி கும்பிடவும். சரடு பெருக்கி கட்டவும்.