முகூர்த்தம்
புரோகிதர் வந்து முகூர்த்தக்கால் வைத்து விட்டு பொங்கலை பெண்ணும், மாப்பிள்ளையும் 5 பெண்கள் வைத்துச் சுற்றவும். பின் மாப்பிள்ளை காசி யாத்திரை கிளம்பணும்.
மைத்துனர், மாப்பிள்ளை கால் கழுவி, காலில் பொட்டு வைத்து,
பெண்ணின் தாயார், பச்சரிசி, வாழைக்காய், துவரம்பருப்பு, கத்தரிக்காய் தட்டில் வைத்து மாப்பிள்ளை வைத்திருக்கும் தட்டில் போடணும்
உறுமா – மாப்பிள்ளை தாய்மாமா
தேங்காய் – 5, 7, 9, 11 வாழைப்பழம், ஸ்வீட், நகைகள், மாலை-2, குங்கும கூடு, மஞ்சள் கிழங்கு, சீனி பாத்திரத்தில், சட்டை துணி/1, மாப்பிள்ளை தலைப்பாகை போல் தாய்மாமா அனைவரும் மாப்பிள்ளைக்கு தனித்தனியாக கட்டவும்.
பின் பிள்ளையார் சேவிக்க உருளையில் தேங்காய், பழம், பூ, வெற்றிலை, பாக்கு, தாலி, கல்யாணப் புடவை எல்லாம் வைத்து மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு காரோ (அல்லது) சாரட்டிலோ ஏற்றி, அனைவரும் கோவிலுக்குச் செல்லவும். தேங்காய் உடைத்து சாமி கும்பிட்டு, நாத்தனார் நெய்யும் திரியும் போட்டு விளக்குப் போட்டு, புடவையை எடுத்துக் கொண்டு, நாத்தனார் தனி மேளத்துடன் மஹாலுக்கு முதலில் வந்த பெண்ணுக்கு உடுத்தவும்.
பெண்ணை தாய்மாமாவின் மனைவி அழைத்துக் கொண்டு வாசலுக்கு வர வேண்டும். வரும் பொழுது உருளியில் உதிரி புஷ்பங்கள் போட்டு எடுத்து வரவும். முதலில் பெண் மாப்பிள்ளையை வணங்கி, இரு கைகளிலும் உதிரிப்பூவை எடுத்து, மாப்பிள்ளை மார்பில் போடவும் (3 முறை) பின் மாலையை கழற்றி மாப்பிள்ளை கழுத்தில் போடவும். பின் மாப்பிள்ளை தன் மாலையை கழற்றி பெண்ணுக்கு போடவும். பெண் மூக்கில் கை வைத்து வாங்கிக் கொள்ளவும். இப்படி 3 முறை இருவரும் மாற்றிக் கொள்ளவும். பின் பெண்ணும், மாப்பிள்ளையும் கை கோர்த்து மஹாலுக்குள் சென்று ஊஞ்சலில் அமரவும். பின் மணமேடைக்குச் சென்று அமரவும். முதலில் தாய்மாமா முக்காலியில் அமர்ந்து பெண்ணுக்கு பட்டம் கட்ட வேண்டும். தாய்மாமா அனைவரும் கட்டுவிட்டு, மாமாமுறை உள்ளவர்கள் கட்ட வேண்டும். அதற்கு பிறகு மாப்பிள்ளை எழுந்து, முக்காலியில் அமர்ந்து பெண்ணுக்குத் தாலி கட்டவும்.
பின் மாப்பிள்ளையும், பெண்ணும் கை பிடித்து ஹோமத்தை வலம் வந்து மச்சினர் பொரி எடுத்துக் கொடுக்க இருவரும் 3 முறை ஹோமத்தில் போடவும். பின் அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கவும். மச்சினருக்கு சந்தனம் பூசி, பொட்டு வைத்து, டிரஸ்ஸைக் கொடுத்து மோதிரம் போடவும். பின் ஆரத்தி எடுத்து பால், பழம் கொடுக்கவும். பின் எல்லோரும் ஆசிர்வாதம் செய்ய வேண்டும். மாமா பட்டம் கட்டியவர்களுக்கு வடகம், பருப்பு, முறுக்கு கொடுக்கவும். தாலி கட்டி முடிந்தவுடன் நாத்தனாருக்கு சேலை, வெற்றிலை, பாக்கு, பூ வைத்துக் கொடுக்கவும். முடிந்தால் நாத்தனாரின் வீட்டுக்காரருக்கும், குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
நாலாநீர் சீர் – உபநயன சீர்
பிள்ளையார் 1
பூணூல் (தங்கம், வெள்ளி)
தேங்காய், பழம்
வெற்றிலை, பாக்கு
மிளகு, சீரகம், பூண்டு
சட்டை துணி
வேஷ்டி
குடை
செருப்பு
பொங்கல் பானை
பெரிய சீர்
11 சுத்து பெரிய முறுக்கு 11
கருப்பட்டி 11 வட்டு