முகூர்த்த நெல்
கல்யாண மகாலில் வைத்து செய்தால் இரு வீட்டாரும் செய்து விடவும்.
கோலத்தில் 3 முக்காலிக்கு கோலம் போட்டு, 3 வெண்கலப் பானைக்கு மாவு தடவி, பொட்டு வைத்து, பானையின் கழுத்தில் 3 வெற்றிலை, 2 மஞ்சள் விரலியை கட்டி வைக்கவும். விளக்கு வைத்து, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைத்து டம்ளரில் பால் வைக்கவும். சூடம், பத்தி வைத்து, தேங்காய் உடைத்து சாமி கும்பிடவும். மாப்பிள்ளைக்கு வெற்றிலை பாக்கு போடச் சொல்லவும். அம்மாவோ அல்லது தாய்மாமா சம்சாரமோ உடன் வந்து மாப்பிள்ளை உடன் சேர்ந்து ஒரு பானையாக முக்காலியில் வைத்து, 3 பானையிலும் பாலை சிறிது ஊற்ற சொல்லி, நெல்லை எடுத்து இரு கைகளிலும் அள்ளி இடதுபுறம் 3 சுற்று, வலதுபுறம் 3 சுற்று சுற்றி விட்டு பானையில் போடவும். எல்லா சுமங்கலிகளும் சந்தனம், பொட்டு வைத்து வெற்றிலை போடவும். பின் எல்லோரும் நெல்லை போட்டு பானையை நிரப்பிய பின் மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுத்து வைத்து பால், பழம் கொடுக்கவும்.
பெண்ணுக்கு எடுத்த புது சேலையை உடுத்தி உட்கார வைத்து சந்தனம் பூசி, பொட்டு வைத்து, வெற்றிலை போட்டு, பின் பெண்ணை அழைத்து வந்து, பானையில் பால் ஊற்றி, நெல்லை சுற்றிப் போடவும். பின் எல்லோரும் போட்டு, பானை நிரம்பிய உடன் ஆரத்தி எடுத்து பால், பழம் கொடுக்கவும்.
பெண் ஊரில் இருந்தால் தனியே அவர்கள் வீட்டில் முகூர்த்த நெல் வைக்கவும்.
நன்றி
தாத்பரியம் தெரிவிதால் நன்று.செயலின் பொருள் தெரிந்து