ஆவணி மாதம்
ஒவ்வொரு ஞாயிறுக்கிழமையிலும் பால் பொங்கல் வைத்து, அரிசி மாவில் தண்ணீர் விட்டுப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, தண்ணீரை கொதிக்க விட்டு, உருண்டையைப் போட்டு வெந்தவுடன் எடுக்க வேண்டும். பொங்கலின் மேல் சிறிது வெல்லம் வைத்து தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைத்து மாடியில் சூரிய பகவானுக்கு படைத்து சாமி கும்பிட வேண்டும்.