பொன் வணிகன்
சித்தர்களும் சமணர்களும் வாழும் புண்ணிய பூமி! உசிலம்பட்டியிலிருந்து விக்கிரமங்கலம் வரும் வழியில் அமைந்துள்ளது சித்தர் மலை. இயற்கை எழில் நிறைந்த மலை. பல கல்வெட்டுகளும் சித்தர்கள் வாழ்ந்த குகைகளும் உள்ளது. மதுரை என்ற பெயருள்ள தமிழ்பிராமிக்கல்வெட்டுக்கள் இரண்டு இடங்களில்தான் உள்ளது. ஒன்று அழகர்கோயில் கிடாரிப்பட்டி மலை. அதில் மதிரை உப்பு வணிகன், மதிரை பொன் வணிகன் போன்ற பெயர்கள் காணப்படுகிறது.
பொன் வணிகர்
பொன் விற்கும் வணிகர் பொன் பொடியைப் பவளச் செப்பில் வைத்திருப்பர்.
இதனை,
“சினைப்பூங் கோங்கின் நுண்தாது பகர்நர்
பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன” என அகப்பாடல் தெரிவிக்கும்.
இங்கு பொன் வணிகன் என்று குறிப்பிடுவது காசுக் கடைச் (காசுக்காரச்) செட்டியார் களான நம்மவரை மட்டுமே குறிப்பதாகும்.
Good information unknown to most of us
Great