
தெய்வத்திரு. நடேசன் செட்டியார் அவர்களின் சுவிகாரப் புதல்வர் தெய்வதிரு அருணாசலம் செட்டியார், பள்ளியை நிர்வகித்து வந்தார்.
அவருக்குப்பின் அவர்களின் மகன் திரு. அரு. நடேசன், அவர்கள் தாளாளர் பள்ளியை நிர்வகித்து வருகிறார் .
பள்ளியின் தலைமை ஆசிரியராக திரு. அ. பாண்டியராஜன் அவர்கள் பணியாற்றிவருகிறார்.
தற்போது 260 மாணவ, மாணவியர்களும் 10 ஆசிரியர்களும் உள்ளனர். அறிவியல், இலக்கியம், விளையாட்டு என அனைத்தும் கற்பிக்கப்பட்டு வருகிறது, பள்ளியில் நாட்டுப் பற்றை வளர்க்கும் விதமாக விழாக்கள் நடைபெற்று வருகிறது.
பள்ளியில் மாணவர் மன்றம் மூலம் பேச்சாற்றல், கட்டுரை எழுதும் திறன், ஓவியத்திறமை, திருக்குறள் ஒப்பிவித்தல், பாவை விழா, பாரதி விழா, போன்றவற்றில் மாவட்ட, மாநில அளவில் பரிசுபெற்று வருகிறார்கள்.
பள்ளியில் சுற்றுசூழல் மன்றம் அறிவியல் மன்றம் ஹெல்த் கிளப் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று விழிப்புணர்வு வழங்கி வருகிறார்கள்.
மாணவர்கள் சேமிப்பு பழக்கத்திற்காக அஞ்சலக வங்கி கணக்கு தொடங்கித்தருகிறோம் நூலகத்தில் உறுப்பினராக்கி நூல்கள் படிக்கச் சொல்கிறோம் மாணவர்கட்கு கைத்தொழில் கற்பிக்கபட்டு வருகிறது
பள்ளியின் செயல்பாடுகளுக்காக 2007-2008 கல்வி ஆண்டில் மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிக்கான விருதை ஆட்சி தலைவர் மூலம் பெற்றோம்
அறிவியல் கண்காட்சிக்கான "சிறந்த பள்ளிக்கான விருதை பெற்றோம்.
மாணவர்களின் அறிவியல் படைப்புகளுக்கு " இளம் விஞ்ஞானி விருது " பெற்றார்கள்.
மாணவர்களின் சாதனைகள் தினமலர் "அக்கம் பக்கம்" பகுதியில் இடம் பெற்றது.
தலைமை ஆசிரியர் திரு. அ. பாண்டியராஜன் அவர்களின் கட்டுரைகள் தினமலர் “என் பார்வையில்” விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது
88 ஆண்டுகளாக சிவகங்கைப் பகுதி மாணவர்களுக்கு தரமான கல்விப்பணி ஆற்றிவருகிறது அரு. நடேசன் செட்டியார் நடுநிலைப் பள்ளி. மாணவர்கள் கல்வி கற்பதோடு, கடமை, கண்ணியம் , கட்டுப்பாடு , பொறுப்பு முதலிய பண்பு நலன்களை பெற்றுவிடுவது சிறப்புக்குரியதாகும்.






